×

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

 

தூத்துக்குடி, ஆக. 28: தூத்துக்குடி கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவியான அமைச்சர் கீதாஜீவன் செல்பி எடுத்துக் கொண்டார்.
தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் செயல்பட்டு வரும் ஏ.பி.சி.வீ. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவிகள், முன்னாள் பேராசிரியர்கள், கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஊழியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியான, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மலரும் நினைவுகளை தன்னுடன் படித்த மாணவிகளுடன் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் முன்னாள் மாணவிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவிகளுடன் சேர்ந்து தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதையொட்டி முன்னாள் மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதில் முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமையில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Women's College ,Minister ,Geethajeevan ,Tuticorin ,Tuticorin College ,Alumni Meet ,Women's ,College ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை