×

மகளிர் உலகக் கோப்பை செஸ் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்திய வந்திகா : 3வது சுற்றில் தமிழகத்தின் வைஷாலி

படுமி: ஜார்ஜியாவின் படுமி நகரில், ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்று செஸ் போட்டியில் உக்ரைனை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் அன்னா உஷெனினா உடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் வந்திகா அகர்வால் மோதினார். ஒரு கட்டத்தில் இரு வீராங்கனைகளும் 3-3 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் இருந்தனர்.

அதன் பின் டைபிரேக்கரில் சிறப்பாக செயல்பட்ட வந்திகா, 4.5 – 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதையடுத்து, 3வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை கேத்தரீனா லாக்னோ உடன் வந்திகா மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் கனடா வீராங்கனை ஒயுலெட் மய்லி ஜேட் உடன் மோதிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

The post மகளிர் உலகக் கோப்பை செஸ் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்திய வந்திகா : 3வது சுற்றில் தமிழகத்தின் வைஷாலி appeared first on Dinakaran.

Tags : Vandika ,Women's World Cup Chess ,Tamil Nadu ,Vaishali ,Batumi ,FIDE Women's World Cup Chess ,Batumi, Georgia ,Anna Ushenina ,Ukraine ,Indian Grand Master ,Vandika… ,Dinakaran ,
× RELATED இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே...