×
Saravana Stores

பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகரான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. சுரேஷ் கோபி 2024 நாடாளுமன்ற தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக முயன்று வருகிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி பாஜ மேலவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் கோபி, ஒரு தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசினார்.

அந்தப் பெண் நிருபர் விலகிய போதிலும் மீண்டும் சுரேஷ் கோபி அவரை தொட்டார். இதுகுறித்து அந்தப் பெண் நிருபர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் கோபி மீது 35ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று(ஜன.08) மலையாள நடிகரும் பாஜக பிரமுகரான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. சுரேஷ் கோபி 2024 நாடாளுமன்ற தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக முயன்று வருகிறார்.

The post பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Munjamin ,Suresh Kobi ,Thiruvananthapuram ,BJP ,Suresh Gobi ,Thrissur ,Cinema ,
× RELATED சபரிமலை பக்தர்களுக்கு கழிப்பறை உள்பட...