×

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

புதுடெல்லி: இந்தியாவில் ஐடி விதிகளுக்கு இணங்காத 74 லட்சம் கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதிக்கப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் மாதாந்திர அறிக்கையில் கூறி உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, அனைத்து சமூக ஊடகங்களும் பயனர்களின் புகார் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மாதந்தோறும் வெளியிட வேண்டும்.

இதன்படி, மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஆகஸ்ட் மாதத்திற்கான பயனர்-பாதுகாப்பு அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதில், இந்தியாவின் ஐடி விதிகள் மற்றும் தனது நிறுவனத்தின் வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளுக்கு இணங்காத 7 லட்சத்து 42 ஆயிரத்து 748 கணக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 35 லட்சத்து 6 ஆயிரத்து 905 கணக்குகள் பயனர்களிடம் இருந்து புகார்கள் வரும் முன்பே தடை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : India ,WhatsApp ,New Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியா 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த...