×

மேற்கு வங்கத்தில் பயங்கரம் திரிணாமுல் காங். தலைவர் சுட்டு கொலை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், ஜகத்டால் பகுதியை சேர்ந்தவர் அசோக் ஷா. முன்னாள் வார்டு தலைவராக இருந்த அசோக் ஷா நேற்று தனது வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அசோக் ஷா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அசோக் ஷாவை பட்பாரா அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் அசோக் ஷா அருகில் நின்றவர்கள் சிலரும் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஜகத்டால் போலீஸ் நிலையத்தின் முன் திரண்டனர். அசோக்கை துப்பாக்கியால் சுட்டவர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post மேற்கு வங்கத்தில் பயங்கரம் திரிணாமுல் காங். தலைவர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Congress ,West Bengal ,Kolkata ,Trinamool Congress ,Ashok Shah ,Jakatdal, North 24 Parganas District, West Bengal ,
× RELATED திடீர் கேள்வியால் பரபரப்பு மேற்குவங்க அரசியலில் மம்தாவின் வாரிசு யார்?