- திருத்தானி கோ.
- எடப்பாடி பழனிசாமி
- ஆரி
- திருத்தணி
- ஆதிமுகா
- பொது செயலாளர்
- எதிர்க்கட்சி தலைவர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- சாமி தரிசனம்
- திருப்பதி
- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
- திருப்பாணி கோ.
- மாநில செயலாளர்
- திரிதானி
- மாத்ரிதானி கோ.
- எடபாடி பழனிசாமி

திருத்தணி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சென்றார். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணியில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.அரி தலைமையில், இரண்டு புறமும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் அமைத்து செண்டை மேளம், டிரம்ஸ் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
திருத்தணி கோ.அரி தலைமையில், கிரேன் உதவியுடன் ராட்சத ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் நினைவு பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து ஏழை, எளியவருக்கு தையல் மெஷின், சலவைபெட்டி மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் நாகப்பூண்டி கோ.குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெயசேகர் பாபு, நகர இளைஞரணி செயலாளர் கேபிள் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலஞ்சேரி பழனி, ஏ.எம் கண்ணய்யா, ஜி.பெருமாள், காசிநாதபுரம் கோதண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருத்தணியில் கோ.அரி தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு appeared first on Dinakaran.
