சென்னை: சொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவிப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏறக்குறைய 5 லட்சம் பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை திரும்புவோருக்காக பல்வேறு ஊர்களிலிருந்து 8,000 பேருந்துகள் வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
The post புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
