பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். தகுதிசுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறி இருந்த உள்ளூர் வீராங்கனை லியோலியா ஜீன்ஜீனுடன் (28 வயது, 148வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
மற்றொரு முதல் சுற்றில் துனிசியா நட்சத்திரம் ஆன்ஸ் ஜெபர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சாஷியா விக்கரியை (29 வயது, 124வது ரேங்க்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப் (அமெரிக்கா), மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), சாம்சனோவா (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரேவை வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (9-7), 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்சை வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் யானிக் சின்னர் (இத்தாலி), பென் ஷெல்டன் (அமெரிக்கா), பெலிக்ஸ் ஆகர் அலியசிமி (கனடா) ஆகியோரும் 2வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.
The post 2வது சுற்றில் ஸ்வியாடெக் மர்ரேவை வீழ்த்தினார் வாவ்ரிங்கா appeared first on Dinakaran.