×

வீட்டுக்கே வந்து வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமே பட்டியலில் பெயர் திருத்தம் செய்யலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024ன் முன் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாக்காளர்களை சரிபார்க்க, அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணி 21.7.2023 முதல் தொடங்கப்பட்டு 21.8.2023 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு காலத்தின்போது, கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:
* வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரிபார்ப்பர்.
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், ஆதார் எண்ணை இணைக்க, இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர் அவரவர் வீட்டிலேயே வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் செய்து கொள்ளலாம்.
* 1.10.2023 தேதி 18 வயது பூர்த்தியடைபவர்பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
* பொதுமக்கள் உரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது நீக்கம் செய்ய, நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க, குடியிருப்பை வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தொகுதிக்குள்ளேயே மாற்றிட, மாற்றுத் திறனாளி என குறிப்பதற்கு, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

The post வீட்டுக்கே வந்து வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமே பட்டியலில் பெயர் திருத்தம் செய்யலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Tamil Nadu ,Chennai ,Satyapratha Chagu ,Election Commission of India ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...