×

நிதி கிடைத்ததும் பிளவுக்கல் பெரியார் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் : விருதுநகர் ஆட்சியர் தகவல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலேயே எந்த காலத்திலும் பச்சைப்பசேல் என காணப்படும் ஒரே ஊர் வத்திராயிருப்புதான். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகான கிராமம் கூமாபட்டி ஆகும். இது வத்திராயிருப்புவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. பிளவக்கல், பெரியாறு அணை இயற்கையோடு இணைந்த மிக அழகான இடம்.கூமாபட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நிதி கிடைத்ததும் பிளவுக்கல் பெரியார் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் : விருதுநகர் ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,Plaukkal ,Virudhunagar Collector ,Virudhunagar ,Koomapatti ,Vathirairuppu ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்