×
Saravana Stores

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு கிராம தன்னார்வலர் பலி

இம்பால்: மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குண்டு பாய்ந்து கிராம தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூரின் காங்போய் மாவட்டத்தில் உள்ள சதாங் குகி கிராமம் அருகே ஆயுதமேந்திய கும்பல் நுழைந்தது. மற்றொரு குழுவும் அங்கு வந்ததால் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து கிராம தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.இதனிடையே தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு கிராம தன்னார்வலர் பலி appeared first on Dinakaran.

Tags : Manipur Imphal ,Manipur ,Satang Kuki village ,Kangboi district ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்