×

விளாத்திகுளம் பஞ். யூனியன் தொடக்கப்பள்ளியில் புதிய 4 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி

*மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

விளாத்திகுளம் : விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரேயுள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என்று விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ். யூனியன் தொடக்கப்பள்ளியில் கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் ஞானவேல், ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், கனகவேல், கிருஷ்ணகுமார், வார்டு செயலாளர்கள் சுப்புராஜ், வெங்கடேசன், சங்கரலிங்கம், மாரிராஜ், வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி, கலைச்செல்வி செண்பகராஜ், சமூக ஆர்வலர்கள் மாரியப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விளாத்திகுளம் பஞ். யூனியன் தொடக்கப்பள்ளியில் புதிய 4 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Vilathikulam Panchayat Union Primary School ,Markandeyan MLA ,Vilathikulam ,Markandeyan ,MLA ,Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது