சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. தேர்தல் ஆணையம் தேதியை வெளியிட்ட மறுநாளே திமுக அதிரடியாக வேட்பாளரை அறிவித்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா திமுகவின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
The post விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு appeared first on Dinakaran.