×

விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்

சென்னை: விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு தினந்தோறும் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சியின் தலைவர்கள், நடிகர், நடிகைகள் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி பிரேமலதா மற்றும் அவர்களது மகன்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமூக வலைதளமான எக்ஸ் தள கணக்கை தனது பெயருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், @imPremallatha என மாற்றியுள்ளார். விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே, அவரின் சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாகியுள்ளது.

The post விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DMDK ,DMD ,Coimbatore, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தேமுதிக அலுவலகத்தில்...