×

வேளச்சேரி தனியார் விடுதியில் முதியவருடன் தங்கிய இளம்பெண் சாவு: 6 பீர்பாட்டில் பறிமுதல்; போலீஸ் விசாரணை

வேளச்சேரி: வேளச்சேரியில் உள்ள விடுதியில் முதியவருடன் தங்கியிருந்த இளம்பெண் திடீரென இறந்தார். அவர்கள் தங்கியிருந்த அறையில் 6 பீர்பாட்டில்கள் இருந்துள்ளது. இதுசம்பந்தமாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் 60 வயது முதியவருடன் தங்கியிருந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார் என்று வேளச்சேரி காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, போலீசார் சென்று விடுதியில் இறந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுசம்பந்தமாக முதியவரை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது அவர் சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த ஜோதி(60) என்று தெரிந்தது. இவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சசிகலா(50) என்பவருடன் பழகிவந்த நிலையில் திடீரென சசிகலா இறந்துவிட்டார். இதனால் கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த சசிகலாவின் 2வது மகள் ரம்யா(27) என்பவர்தான் முதியவருடன் வந்து தங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கியிருந்த அறையில் 6 பீர்பாட்டில்கள் இருந்துள்ளது. முதியவருடன் சேர்ந்து ரம்யாவும் பீர் குடித்துள்ளதாக தெரிகிறது. பின்னர் இரண்டுபேரும் போதையில் தூங்கிவிட்டனர். அப்போது நள்ளிரவில் எழுந்த ரம்யா, நெஞ்சு வலிப்பதாக கூறியபோது டாக்டரிடம் செல்லலாமா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதன்பிறகு அதிகாலையில் மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்தபோது மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டபோது அங்குள்ள தனியார் மருத்துவமணைக்கு அழைத்துசென்றுள்னர். அவரை பரிசோதனை இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ரம்யா சாவில் உள்ள மர்மம் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post வேளச்சேரி தனியார் விடுதியில் முதியவருடன் தங்கிய இளம்பெண் சாவு: 6 பீர்பாட்டில் பறிமுதல்; போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Velachery ,Birbat ,Taramani Road, Velachery, Velachery ,Peerpat ,Dinakaran ,
× RELATED 16 ஆண்டுகால மக்களின் கனவு… வேளச்சேரி –...