×

திசையன்விளை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையா?: போலீசார் விசாரணை

நெல்லை: திசையன்விளை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணை. அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் முத்தையா உடலில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை முத்தையா காதலித்த நிலையில் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நண்பரை பார்ப்பதாக கூறிவிட்டு வெளியே சென்ற முத்தையா பின்னர் வீடு திரும்பவில்லை. முத்தையா உடலை கைப்பற்றிய போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

The post திசையன்விளை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையா?: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Apobula ,Swamidas ,
× RELATED சென்னை காசிமேட்டில் மீன் வாங்க...