×

17வது வந்தே பாரத் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தாயரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிவேக சொகுசு ரயில் சேவையை உறுதிப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

இதுவரை 16 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில். டேராடூனில் இருந்து டெல்லிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.இது நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலாகும். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விழாவில் பங்கேற்கின்றனர்.

 

The post 17வது வந்தே பாரத் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Bharat Railway Service ,Delhi ,PM Modi ,Vande Bharat Railway Service ,Dinakaran ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு...