×

வேட்டையன் படம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

மதுரை: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது. மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். படத்தை முழுவதையும் பார்த்த பிறகு, என்கவுண்டரை நியாயப்படுத்துவதாக படம் அமையவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

The post வேட்டையன் படம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,iCourt ,Rajinikanth ,PALANIVELU ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி