×

பச்சைமலையில் பாதுகாப்பாற்ற வியூ பாயின்ட்: இரும்பு தடுப்புகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

துறையூர்: துறையூர் அருகே உள்ள பச்சமலையில் திறந்தவெளியில் உள்ள பார்வைமுனை காட்சி முனை பகுதியில் பாதுகாப்பற்ற இரும்பு தடுப்புகளை சரி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிக் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பச்சைமலை. பச்சை மலையின் அழகை கண்டு களிப்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்கின்றனர். பச்சைமலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவி இயற்கை வழித்தடங்களான செண்பகம் வழித்தடம், சோளமாத்தி வழித்தடம் போன்றவைகள் உள்ளன. பச்சைமலை செல்வதற்கு துறையூரில் இருந்து இரண்டு புறங்களில் மலைவழி பாதைகள் உள்ளன. துறையூரில் இருந்து உப்பிலியபுரம், சோபனபுரம் வழியாக டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் மலைப்பாதை உள்ளது. இந்த பாதைவழியாக சென்று மலை உச்சியை அடையும்போது அங்கே திறந்த வெளி பார்வை காட்சிமுனை (வியூ பாய்ன்ட்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி முனையில் இருந்து பார்க்கும்போது கொல்லிமலை, ஜம்பேரி, பச்சபெருமாள்பட்டி, சின்ன ஏரி, பெரிய ஏரி, ரெட்டியார்பட்டி ஏரி, சிறு நாவலூர் ஏரி, கிராமப் பகுதி இடங்கள் தெள்ளத் தெளிவாக தெரியும்.

இந்த பார்வை காட்சிமுனை அமைக்கப்பட்டுள்ள மேடையில் இரும்பு பைப்புகள் (தடுப்புகள்) தற்போது பழுதடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த திறந்தவெளி பார்வைகாட்சி முனையில் நின்றுகொண்டு சுற்றுலா பயணிகள் நிலப்பகுதி அழகை கண்டுக் கழிக்கின்றனர். இப்பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கம்பிகள் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதாலும் ஆங்காங்கே இடைவெளி இருப்பதாலும் குழந்தைகள் பார்வையிடும்போது தவறி கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி திறந்தவெளி பார்வை காட்சிமுனை மேடையில் உள்ள இரும்பு கம்பிகளை சம்பந்தப்பட்ட துறையினர் சரி செய்வதற்கு முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post பச்சைமலையில் பாதுகாப்பாற்ற வியூ பாயின்ட்: இரும்பு தடுப்புகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : mountain ,Ditrayur ,Pachamalay ,Diritarayur ,Green Mountain ,
× RELATED 4 நாட்களுக்கு பின் உதகை மலை ரயில் சேவை தொடக்கம்