×

மா விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் சக்கரபாணி

சென்னை: மாம்பழ விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை இன்று ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வழங்குகிறார். மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தை தலையீடு திட்டத்தை செயல்படுத்த கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மாம்பழத்துக்கு உரிய விலை கிடைக்க திட்டத்தை செயல்படுத்த பிரதமர், ஒன்றிய வேளாண் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மா விவசாயிகளின் பிரச்சனைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சக்கரபாணி எடுத்துரைக்கிறார்.

The post மா விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakarapani ,Union Minister ,Chennai ,Sivraj Singh Chaukan ,Chief Minister ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு