×

தோல்வியை ஏற்க முடியாமல் பிளவுபடுத்தும் அரசியலில் இறங்கிய பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் பாஜ ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி‘‘ கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன’’ என்றார். இது பற்றி பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா டிவிட்டரில் பதிவிடுகையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடந்த காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்தில் போலீசார் முன்னிலையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது.

பட்கலில் பிறை மற்றும் நட்சத்திரம் கொண்ட பச்சை நிற கொடியை வெற்றி ஊர்வலத்தில் ஒருவர் எடுத்து சென்றார். காங்கிரசின் தாஜா செய்யும் அரசியல் கர்நாடகவின் சமூக அமைப்பை உடைத்து விடும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், தேர்தலில் காங்கிரசின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் ஆன்லைன் வெறுப்பு தொழிற்சாலை மூலம் பொய்களையும், பிளவுபடுத்தும் அரசியலையும் பாஜ கட்டவிழ்த்து விடுகிறது என தெரிவித்துள்ளார்.

The post தோல்வியை ஏற்க முடியாமல் பிளவுபடுத்தும் அரசியலில் இறங்கிய பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,Karnataka Assembly ,Dinakaran ,
× RELATED கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை...