×

யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இங்கிலாந்து-இந்தியா மோதல்: தமிழகத்தின் 3 பேருக்கு அணியில் இடம்

ஹோவ்: இந்தியாவை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டோர் அடங்கிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஆண்கள் தேசிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்ட யு19 இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இரு அணிகளும் மோத உள்ளன. ஒரு நாள் ஆட்டங்கள் முறையே ஜூன் 27, 30, ஜூலை, 2 5, 7, தேதிகளில் ஹோவ், நார்தாம்டன், வொர்ஸ்டர் நகரங்களில் நடைபெறும். தொடர்ந்து ஜூலை 12ம் தேதி முதல் டெஸ்ட் பெகென்ஹாமிலும், ஜூலை 20ம் தேதி 2வது டெஸ்ட் செம்ஸ்ஃபோர்டிலும் தொடங்கும். ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் அபிக்யான் குண்டு (துணைக் கேப்டன்) வைபவ் சூரியவன்ஷி, அன்மோல்ஜித் சிங், பிரணவ் உட்பட 16 பேர் இடம் பெற்றுள்ள ஒருநாள் அணியில் பிரணவ், ராகவேந்திரா, தீபேஷ் தேவேந்திரன், ஆர்.எஸ்.அம்ரீஷ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

டெஸ்ட் அணியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் ராகவேந்திரா (வேலூர்), தீபேஷ் தேவேந்திரன் (செங்கல்பட்டு), ஆர்.எஸ்.அம்ரீஷ் (சென்னை) மூவரும் இடம் பெற்றுள்ளனர்.

The post யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இங்கிலாந்து-இந்தியா மோதல்: தமிழகத்தின் 3 பேருக்கு அணியில் இடம் appeared first on Dinakaran.

Tags : U19 One-Day Cricket Match ,England ,India ,Howe ,Under-19 ,Tamil ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!