×

அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவியாக வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், சிறப்புப் பணி அதிகாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 38 மாவட்டங்களிலும், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டன. 2024ம் ஆண்டு மே மாதத்தில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 2021ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் 12 வாரங்களில் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட்ட நிலையில் 2024 மே வரை அவகாசம் கோரப்படுகிறது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக உள்ள முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும். இதற்காக இசேவை மையத்தின் சேவையை பயன்படுத்த வேண்டும். அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றத்துக்கு உதவியாக வரும் 31ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் சிறப்பு அலுவல் அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு