×
Saravana Stores

சட்டவிரோதமாக பதவியேற்றதாக கூறி 2 திரிணாமுல் எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்த கவர்னர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மக்களவை தேர்தலின் போது மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராயத் உசைன் சர்க்கார், சயந்திகா பானர்ஜி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் எம்எல்ஏவாக பதவி ஏற்க கவர்னர் அனுமதி அளிக்காததால் ஒருமாதம் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இறுதியாக துணை சபாநாயகர் ஆசிஷ் பானர்ஜி, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆனந்த போஸ் அதிகாரம் அளித்தார்.

ஆனால் ஜூலை 5ம் தேதி சட்டப்பேரவையில் அவர்களுக்கு சபாநாயகர் பிமன்பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தனது உத்தரவை மீறி சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதம் என்று கவர்னர் தெரிவித்தார்.  இந்தநிலையில் அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்ெதாடரில் பங்கேற்றது அரசியல் அமைப்பு விதிமுறைகளை மீறியுள்ளதால் 2 புதிய எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்து கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

The post சட்டவிரோதமாக பதவியேற்றதாக கூறி 2 திரிணாமுல் எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்த கவர்னர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Trinamool ,West Bengal ,Kolkata ,Rayat Usain Sarkar ,Sayantika Banerjee ,Trinamool Congress ,Chief Minister ,Mamata ,Lok Sabha elections ,MLA ,Dinakaran ,
× RELATED டிராவல் பண்ணது ஒரு குத்தமாயா… பெண்கள்...