சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் 22 வாரங்கள் பயிற்சி நிறைவு செய்த, 234 பெண் வீரர்கள் உள்பட 1,983 அக்னிவீர் வாயு விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில், மத்திய விமானப்படை மூத்த பொறுப்பு நிர்வாக அதிகாரி ஏர்வேஸ் மார்ஷல் அமன் கபூர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சியில் சிறந்து விளங்கிய அக்னிவீர்வாயு விமானப்படை வீரர்களான நரேந்திர நாயக், அணில் குமார், ஹர்ஷ் குமார் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ‘‘அனைத்து வீரர்களும் தங்கள் திறன்களை மேலும் மேம்படுத்தவும், தொழில் முறை அறிவை மேம்படுத்தவும் கற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.இதன்மூலம், விண்வெளி பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் நோக்கங்களுக்கு பங்களிக்க முடியும். இந்திய விமானப்படை செயல்பாட்டு தத்துவத்தில் பெரிய மாற்றங்களை கண்டு வருகிறோம். பெரும் திறன் கொண்ட துடிப்பான சக்தியாக உள்ளது’’ என்றார்.
மேலும், அக்னிவீர்வாயு வீரர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சுறுசுறுப்பாகவும் இந்திய விமானப்படையில் சிறப்பாக செயல்படுவும் வலியுறுத்தினார். இதனையடுத்து, விமானபடை வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி காட்சிகள், யோகா உட்பட பல்வேறு பயிற்சிகள் நடந்தது.
The post தாம்பரம் விமானப்படை தளத்தில் 1,983 அக்னிவீர்வாயு வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு appeared first on Dinakaran.