×

ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு அறிவித்த ரயில் கட்டண உயர்வு ஏழை மக்களைகடுமையாக பாதிக்கும் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி, அதனை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்கட்சிகள், ரயில் பயணிகள் சேவை அமைப்புகள் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஒன்றிய அரசு எந்தவித மாறுதலும் இல்லாமல் ரயில் கட்டண உயர்வை அமலாக்கியுள்ளது. முன்பதிவு முறையில் தட்கல், பிரீமியம் தட்கல், அதிவிரைவு வண்டி, சிறப்புக் கட்டண சேவை என பல்வேறு வகைகளில் ரயில் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை கட்டண உயர்வு என்பதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டண சுமையை பயணிகள் தலையில் சுமத்தியிருக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை வன்மையாக கண்டிக்கிறோம். தற்போது அமலாக்கத்துறை தொடங்கியுள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Union Government ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…