×

பாரம்பரிய மிளகுப் பொங்கல்

தேவையானவை:

குதிரைவாலி அரிசி – 200 கிராம்
லேசாக வறுத்த பாசிப்பருப்பு – 100 கிராம்
தண்ணீர் – 4 குவளை
உப்பு – தேவைக்கு
இஞ்சி – தேவையான அளவு
பச்சைமிளகாய் – சிறிது
சீரகம் – 2 சிட்டிகை
மிளகு – 3 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 50 கிராம்
முந்திரிப்பருப்பு – 20 கிராம்.

பக்குவம்:

தண்ணீரைக் கொதிக்க வைத்து குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து குழைய வேக விடவும். சிறிதளவு நெய் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து பொங்கல் பதம் வந்ததும் எண்ணெயைக் காய வைத்து சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும். பொங்கல் மேல் நன்றாக நெய்யை சேர்க்கவும். மிளகை அப்படியே முழுசாகச் சேர்க்காமல் அம்மியில் லேசாகத் தட்டிப் போட்டால் சுவையாக இருக்கும்.

The post பாரம்பரிய மிளகுப் பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்