![]()
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தாக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரையிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரையிலும் விற்கப்பட்டது. இடையில் கடந்த சில நாட்களாக ஓரளவு விலை குறைந்து, கடந்த 24-ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், மீண்டும் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் கடந்த 25-ம் தேதி கிலோவுக்கு ரூ.10-ம், 26ம் தேதி கிலோவுக்கு ரூ.20-ம் உயர்ந்தது. தொடர்ந்து, நேற்றைய தினம் (சனிக்கிழமை) மீண்டும் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.150க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
The post சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அவதி! appeared first on Dinakaran.
