மதுரை : ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்திச் செல்ல அரைமணி நேரமாகிறது என்று ஐகோர்ட் கிளை கவலை தெரிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,” எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.,
இந்த மனு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, “தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். மதுரை, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளை வாகனங்கள் விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி இல்லையா?. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
The post சுங்கச் சாவடிகளை வாகனங்கள் விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி இல்லையா? : ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.
