×

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் ராகுல் உரையின்போது நேற்று பாஜக-வினர் இடையூறு செய்தனர் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பாஜக-வினர் என்று கோபண்ணா குற்றச்சாட்டியுள்ளார். நியாயமான கேள்விகளுக்கு மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை என கூறினார். அவைக்குறிப்பில் இருந்து ராகுல் பேச்சுகள் நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் உண்மை மறைந்துவிடாது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுகள் நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.

The post சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Delhi ,Gopanna ,Rahul ,Modi government ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...