×

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. கோவையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர் அமித்ஷாத் விக் டக்அவுட் ஆனார். ராஜ்குமார் 14, பிரதோஷ ரஞ்சன்பால் 38 ரன்கள் எடுக்க துஷாரா ரஞ்சன் அதிரடி காட்டினார். எனினும் மற்ற வீரர்கள் அவருக்கு கம்பெனி கொடுக்கவில்லை. துஷார் ரஞ்சன் பால் 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் அந்த அணி 173 ரன் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சில் விஜய் சங்கர், அபிஷேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஆஷிக் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். மோகித் ஹரிகரன் அபாரமாக விளையாடி 22 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். எனினும் பாபா அப்ரஜித் திருப்பூர் பந்துவீச்சை சிதறடித்து 5 பவுண்டரி, 5 சிக்சர் என 48 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

இறுதியில் விஜய் சங்கர் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 16 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலிடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி இரவு 7:15 மணிக்கு கோவையில் தொடங்குகிறது.

The post டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Chepak Super Gillies ,TNBL T20 cricket ,Goa ,Tiruppur Tamils ,TNBL cricket series ,Amitshad Vick Duckout ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!