- சீனிவாசமூர்த்தி சாலை நடை
- கைசிக துவாதசி
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- திருமலா
- ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்ர
- ஸ்ரீநிவாசமூர்த்தி
- கைசிக துவாதசி
- திருப்பதி ஏழு மலையான் கோயில்
- ஸ்ரீநிவாசமூர்த்தி தெரு
- நடக்கிறார்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்ர சீனிவாசமூர்த்தி 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகாவிஷ்ணு தெலுங்கில் ஆடி மாதம் சுக்ல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச்செல்வார். பின்னர் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி நேற்று நடந்தது.
இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமாலை சேவை நடந்தது. தொடர்ந்து சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை உக்ர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்திமுழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை, ‘வெங்கடதுரைவார்’ என்றும் அழைப்பர். வீதிஉலா முடிந்ததும் உற்சவர்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கோயிலில் உள்ளே கருடாழ்வார் சன்னதி அருகே காலை 7 மணியளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடந்தது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி சீனிவாசமூர்த்தி வீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.