×

62 ஏக்கர் பரப்பில், ரூ.30 கோடி செலவில் ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில்: ஜூன் 8ம் தேதி கும்பாபிஷேகம்

ஜம்மு: ஜம்மு மஜீன் பகுதியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுன் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக உள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டி வருகிறது. சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, ஐதராபாத், புவனேஷ்வர் ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜம்முவின் மஜீன் பகுதியில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படுகிறது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது.

இந்த இடத்தில் ரூ.30 கோடி மதிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கி முடிவடைய உள்ளன. புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அருகில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. ஜம்முவில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. ஜுன் 8ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, கும்பாகிஷேகம் நடத்தப்படும். திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் இங்கும் பின்பற்றப்படும்” என்று கூறினார்.

The post 62 ஏக்கர் பரப்பில், ரூ.30 கோடி செலவில் ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில்: ஜூன் 8ம் தேதி கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Etemalayan Temple ,Jammu ,Kumbaphishekam ,Tirupati Ethumalayan Temple ,Jammu Majeen ,AP ,Tirupati Etemalayan Temple ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!