×

திருப்பதியில் ஏப்ரல் மாதம் உண்டியலில் ரூ.114 கோடி காணிக்கை குவிந்தது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள உண்டியல்களில் கடந்த ஏப்ரல் மாதம் பக்தர்கள் ரூ.114 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் 82 ஆயிரத்து 582 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 43 ஆயிரத்து 526 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.19 கோடி காணிக்கையாக கிடைத்தது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் ரூ.114.12 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை வருவாய் மாதந்தோறும் ரூ.100 கோடியைத் தாண்டி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தொடர்ந்து 14வது மாதமாக ஏப்ரலில் திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

* 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
திருப்பதியில் மே தினமான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி ஆய்வார் டேங்க் காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், இலவச சர்வதரிசன டிக்ெகட் பெற்ற பக்தர்களும், மலைபாதையில் பாதாயத்திரையாக சென்று திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும் 8 மணிநேரத்திலும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் ஏப்ரல் மாதம் உண்டியலில் ரூ.114 கோடி காணிக்கை குவிந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Piggy ,Tirumalai ,Tirupati Etemalayan temple ,Tirupati ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...