×

திருப்பதி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

*குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி

திருமலை : திருப்பதி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தையுடன் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தெலங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடக மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதன்படி, நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு முதல் மலைப்பாதை சாலையில் வளைவில் திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி காரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.

கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 6வது வளைவில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உள்பட தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த திருமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், காரில் பயணம் செய்த பக்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

The post திருப்பதி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati hill ,Tirumala ,Tirupati hill pass ,Tirupati mountain pass ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி நியமனம்