×

திருச்செந்தூர் கோயில் உண்டியலில் 1.7 கிலோ தங்கம் 3.42 கோடி பணம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில், உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 3 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 824 ரூபாயும், 1 கிலோ 701 கிராம் தங்கம், 22 கிலோ 791 கிராம் வெள்ளி, 7.04 கிலோ பித்தளை, 44.124 கிலோ செம்பு, 9.02 கிலோ தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1237ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியலில் வெள்ளியிலான சுவாமி முகம் மற்றும் வேல்களும், வெளிமாநில லாட்டரி சீட்டுகளும் இருந்தன.

The post திருச்செந்தூர் கோயில் உண்டியலில் 1.7 கிலோ தங்கம் 3.42 கோடி பணம் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Tiruchendur Murugan temple ,Vasantha Mandapam ,Thakkar Arulmurugan ,Joint Commissioner ,Gnanasekaran ,Sivakasi Pathinen ,Siddhar Matha ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...