×

திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. யாகசாலையில் மந்திரங்கள் ஒதுவது தொடங்கி, திருமறை பாடுவது என அனைத்தும் தமிழில் நடக்கும்.

திருபுகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறவுள்ளன. திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில் அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் குடமுழுக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு தற்போதைய வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pooja ,Kudarukuk ,Tiruchendur ,Tamil Nadu government ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...