×

திருவேற்காடு எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரி சார்பில் காகிதப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா உத்தரவின் பேரில் முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார், கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ‘போதைப் பொருளை ஒழித்து புதிய பாரதத்தைப் படைப்போம்’ என்ற வாசகங்களைத்தாங்கி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச்சங்கிலி நடத்தினர்.

இந்த மனித சங்கிலியை சுதர்சனம் வித்தியாசம் பள்ளியிலிருந்து கல்லூரி வளாகம் வரை நின்று முழக்கங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பிகாம் சி.எஸ். மாணவர்கள் உலக காகிதப்பை நாளினை முன்னிட்டு, ‘காகிதப் பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்து, இயற்கையை பாதுகாப்போம்’ என்கிற பதாகைகளை தாங்கியபடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பி.காம் ஏ அண்டு எப் மாணவர்கள் உலகமக்கள் தொகை நாளை முன்னிட்டு ஆண், பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் மனித வளத்தை நன்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்பதை குறித்தும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post திருவேற்காடு எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரி சார்பில் காகிதப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : SA College of Arts and Science ,Thiruvekadu ,Tiruvallur ,SA Arts and Science College ,Thiruvekkad ,Poontamalli Aavadi Highway ,P.Venkateshraja ,
× RELATED திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம்...