×

திருக்கழுக்குன்றத்தில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக, மாமல்லபுரம் பேரூர் திமுக சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை பங்கேற்று, வாக்குசாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர், வாக்குசாவடி முகவர்களுக்கு உறுப்பினர்கள் பதிவு செய்யும் நோட்டு புத்தகம் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கர் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், ஒன்றிய துணை சேர்மன் பச்சையப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, திமுக நிர்வாகிகள் கரியசேரி சேகர், சுகுமாறன், கீரப்பாக்கம் பெருமாள், கடும்பாடி பூபதி, சுரேஷ், பரந்தாமன், பன்னீர், செங்குட்டுவன், சரவணன், இளங்கோ, அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post திருக்கழுக்குன்றத்தில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trincomalee ,Thirukkalukulam North Union ,Thirukakulam Perur Dimuka ,Mamallapuram Perur Dimuka ,Trinikakulhu Forum ,Tamil Mani ,Secretary General ,Northern Union ,Triumvirate ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...