×

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

உத்திரமேரூர், டிச.11: உத்திரமேரூர் பேரூராட்சி சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் நவீன் குமார்(35). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை எக கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனிமையாக இருந்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நவீன் குமாரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uthiramerur ,Naveen Kumar ,Chunnambu Kara Street ,Uthiramerur Town Panchayat ,
× RELATED காஞ்சிபுரத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்