×
Saravana Stores

செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி 2.6 சதவீதம் சரிவு

புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதி தொடர்பாக ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,447 கோடியாக டாலர் (ரூ.2,86,101 கோடி) இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு 35.39 கோடி டாலர் (ரூ.2,93,737 கோடி) இத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் சரிந்துள்ளது. இறக்குமதி 15 சதவீதம் சரிந்து, 5,384 கோடி டாலராக (ரூ.4,46,872 கோடி) இருந்தது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 6,337 கோடி டாலராக (ரூ.5,25,971 கோடியாக இருந்தது. வர்த்தக பற்றாக்குறை 1,937 கோடி டாலர் (ரூ.1,60,771 கோடி). நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 8.77 சதவீதம் சரிந்து, 21,140 டாலர் (ரூ.17,54,620 கோடி).இவ்வாறு அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

The post செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி 2.6 சதவீதம் சரிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,
× RELATED தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க...