×

தரங்கம்பாடி அருகே வீரசோழன் ஆற்றில் ரூ.27 லட்சத்தில் தூர்வாரல்

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே வீரசோழன் ஆற்றில் ரூ.27 லட்சத்தில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில் அரும்பாக்கத்தில் இருந்து எடுத்துகட்டி வரை வீரசோழன் ஆற்றில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.

ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கபட இருப்பதால், பொதுப்பணித்துறையினர் தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தூர் வாரும் பணி பொறையார், உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் ஸ்ரீனிவாசன், ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

The post தரங்கம்பாடி அருகே வீரசோழன் ஆற்றில் ரூ.27 லட்சத்தில் தூர்வாரல் appeared first on Dinakaran.

Tags : Veeracholan River ,Tharangambadi ,Mayiladuthurai district ,Public Works Department ,Arumbakkam ,Tollakatti ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...