×
Saravana Stores

என்கவுன்டரில் 23 தீவிரவாதிகள் பலி: 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் ஐ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெசாவர் அருகே ஹசான் கேல் பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து டேங் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் கைபர் மாவட்டத்தின் பாக் பகுதியில் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 தீவிரவாதிகள் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 23 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

The post என்கவுன்டரில் 23 தீவிரவாதிகள் பலி: 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : ISLAMABAD ,Tehrik-i-Taliban ,Pakistan ,Khyber Pakhtunkhwa ,Hasan Khel ,Peshawar ,Dinakaran ,
× RELATED ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன்