×

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,037 பேர் பரிதாப பலி: மீட்பு பணிகள் தீவிரம்!

ராபட்: மொராக்கோ மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,037ஆக உயர்ந்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களால், 33,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயடைந்தனர். இருநாடுகளின் பொருளாதார கட்டமைப்பே நிர்மூலமானது. தற்போது இரு நாடுகளும் மெதுவாக மீண்டு வரும் நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்றிரவு 11.14 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.41 மணி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கும் இந்நாட்டின் எல்லைகளில் கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகிய நாடுகள் உள்ளன.

மொரோக்கோவின் மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்டு 7.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூக்கத்தில் இருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நிலநடுக்கமானது சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து மொராக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,037ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

The post மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,037 பேர் பரிதாப பலி: மீட்பு பணிகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Morocco ,Rabat ,Marrakesh ,Turkey, Syria ,
× RELATED புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது...