×

டென்னிஸ் சாம்பியன்கள்

தேசிய அளவில் தரவரிசை புள்ளிகளுக்கான டென்னிஸ் தொடரை தமிழ் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், இண்டியம் நிறுவனம் இணைந்து நடத்தின. சென்னையில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாரா டென்னிஸ் பைனலில் கர்நாடகாவின் சேகர் வீராசாமி 6-1,6-4 என நேர் செட்களில் சக வீரர் கே.கார்த்திக்கை வீழ்த்தினார். மகளிர் பாரா டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் கே.பி.ஷில்பா 6-1,4-6,10-7 என்ற செட்களில் சக வீராங்கனை பிரதிமா ராவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பைனலில் அரியானாவின் அஞ்சலி ரதி 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் கர்நாடக வீராங்கனை சாய் ஜான்வியை வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. முதல் 2 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க கவுரவ செயலர் பிரேம் காரா, இணை செயலர் வெங்கட், இயக்குனர் ஜித்தன் ஜோஷி, இண்டியம் நிறுவன நிர்வாகிகள் ராம்குமார், விஜயபாலாஜி பங்கேற்றனர்.

The post டென்னிஸ் சாம்பியன்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Tennis Association ,Indium ,Chennai ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது...