×
Saravana Stores

வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது; பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை

நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றதால், முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது.

இதனால் முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் சாலைகளிலும், ரயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனிப்புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பென்சில்வேனியா மாகாணத்தில் நிலவிய கடுமையான பனிப்புயல் காரணமாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால் 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் வரும் நாட்களில் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் தடை விதித்துள்ளன.

The post வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது; பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை appeared first on Dinakaran.

Tags : blizzard ,United States ,New York ,Boston ,Newport ,States ,
× RELATED அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே...