- தெலுங்கானா விடுதலை நாள் அமித் ஷா
- திருமலா
- ஹைதெராபாத்
- நிசாம்
- இந்தியா
- தெலுங்கானா சுதந்திர தினம் அமித் ஷா
- தின மலர்
திருமலை: நிஜாம் ஆட்சியின்கீழ் இருந்த ஐதராபாத் மாகாணம் கடந்த 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த நாள் கடந்தாண்டு முதல் ஒன்றிய அரசு சார்பில் தெலங்கானா விடுதலை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று 2வது ஆண்டாக செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் தெலங்கானா விடுதலை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தியாகிகள் நினைவுத்தூணில் மரியாதை செலுத்தினார். பின்னர், தேசியக்கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
The post தெலங்கானா விடுதலை தினம் அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.