×
Saravana Stores

இந்தியாவிற்காக விளையாடுவதே எனது முதல் இலக்கு: லக்னோ அணியின் இளம் புயல் மயங்க் யாதவ்

பெங்களூரு: இந்தியாவிற்காக விளையாடுவதே எனது முதல் இலக்கு என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் புயல் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் தனது சிறப்பான வெளிப்படுத்தி அசத்தினார். நேற்று ஆர்சிபிக்கு எதிராக எல்எஸ்ஜி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் மயங்க் யாதவ்-ன் 3 விக்கெட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன.

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் யாதவ் பந்துவீச்சு குறித்து லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளதாவது; “மயங்க் கடினமாக உழைக்கிறார். மிக இளம் வயதில் 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது எளிதானது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்கிறார், அவருக்கு ஏற்கனவே சில காயங்கள் இருந்தன. அவர் தனது உடலைப் பார்த்துக்கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து அவர் பந்து வீசுவதைப் பார்த்து மகிழ்ந்தேன், அவர் பந்துவீசும்போது நான் அங்குதான் இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

யாதவ் நான்கு ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்திய நிக்காக விளையாடுவதே தன்னுடைய முதல் குறிக்கோள், இது ஒரு ஆரம்பம் மட்டுமே, எனது கவனம் முக்கிய இலக்கில் உள்ளது, வேகத்துடன் பந்துவீசுவதற்கு உடற்தகுதி அடிப்படையில் நிறைய விஷயங்கள் தேவை எனவும் மயங்க் யாதவ் கூறினார்.

The post இந்தியாவிற்காக விளையாடுவதே எனது முதல் இலக்கு: லக்னோ அணியின் இளம் புயல் மயங்க் யாதவ் appeared first on Dinakaran.

Tags : India ,Lucknow ,Mayank Yadav ,Bengaluru ,Lucknow Supergiants ,Mayank ,Royal Challengers Bangalore ,Lucknow Supergiants… ,Dinakaran ,
× RELATED ஆஸி. டெஸ்ட் தொடருக்கு...