×

அரசின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சியில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் பட்டா வழங்குவதற்கான கள ஆய்வினை மேற்கொண்டார்கள். அப்பொழுது அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் உரிய ஆவணங்களை ஆய்வு செய்து முறையான ஆவணங்கள் உள்ளதா என கண்டறிந்தார். அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மேலகோட்டையூர் காவலர் பொது மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு உணவருந்தி கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து சிறுசேரி ஊராட்சியில் சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, திருப்போரூர் வட்டம், முட்டுக்காடு ஊராட்சியில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், திருப்போரூர் வட்டம் கோவளம் ஊராட்சியில் நீல வண்ணக்கொடி கடற்கரையினை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், வண்டலூர் வட்டாட்சியர் பூங்கொடி, திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரசின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Keerappakkam panchayat ,Vandalur ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...