- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கட்கா
- மதுரை
- காலோ இந்தியா கட்கா விளையாட்டுகள்
- ராஜஸ்தான்
- U-18
- மதுரை ரேஸ்கோர்ஸ்
- தமிழ்
- தமிழ்நாடு
- கட்கா
- தின மலர்
மதுரை: கேலோ இந்தியா கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியின் யு-18 ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு -, ராஜஸ்தான் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட தமிழ்நாடு அணி 108-79 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது. வர்ஷன் அதிகபட்சமாக 51 புள்ளிகள் குவித்தார். மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 166-110 என்ற புள்ளிக்கணக்கில் இமாச்சலபிரதேச அணியை வென்றது.
மகாராஷ்டிரா 146-67 என கர்நாடகாவையும், ஜார்க்கண்ட் 129-127 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவையும் வீழ்த்தின. மற்ற ஆட்டங்களில் சண்டிகர் 174-111 என மத்தியப்பிரதேசத்தையும், குஜராத் அணி 127-116 என அசாம் அணியையும் வென்றன. தொடக்க விழாவில் மதுரை கலெக்டர் சங்கீதா, எம்பி சு.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாகிகள் சுமித், பல்ஜேந்தர்சிங் பங்கேற்றனர். மதுரையில் கட்கா போட்டிகள் நாளை வரை நடைபெறுகின்றன. கோ-கோ போட்டிகள் 26ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும்.
The post கட்காவில் கலக்கிய தமிழ்நாடு appeared first on Dinakaran.